சக்தி முருகன் ரோலர் ஃபிளவர் மில்ஸ் லிட்

சக்தி முருகன் ரோலர் ஃபிளவர் மில்ஸ் லிட்இந்த நிறுவனம் 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டு 1988-ம் ஆண்டு தனது உற்பத்தியை தொடங்கியது. நாளொன்றுக்கு 75 மெட்ரிக் டன் கோதுமை அரவை திறன் கொண்ட இந் நிறுவனம் சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சக்தி முருகன் அக்ரோ ஃபுட்ஸ் லிட்

சக்தி முருகன் அக்ரோ ஃபுட்ஸ் லிட்எங்கள் நிறுவனத்தின் தரமான பொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த காரணத்தினால், சக்தி முருகன் அக்ரோ ஃபுட்ஸ் லிட்., என்ற பெயரில் 1998-99-ம் ஆண்டு புதியதொரு நிறுவனம் தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் கோதுமை அரவை திறன் கொண்ட இந் நிறுவனம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


இந் நிறுவனம் அவிநாசியில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் (NH-47) அமைந்துள்ளது. இந்த இரு நிறுவனங்களின் மொத்த அரவைத்திறன் மாதமொன்றுக்கு 6000 மெட்ரிக் டன்னாகும்.

சக்தி முருகன் டிரேடிங் கம்பெனி

சக்தி முருகன் டிரேடிங் கம்பெனிசிறு நுகர்வோர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனப் பொருள்களை 1/2kg, 1kg மற்றும் 5kg அளவுகளில் தயாரித்து அளிப்பதற்க்காக துணை நிறுவனமாக சக்தி முருகன் டிரேடிங் கம்பெனி தொடங்கப்பட்டது. தொடர்ந்து நிலையான வளர்ச்சி கண்டுள்ள இந் நிறுவனம் வருடம் 10 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்கிறது.