நிறுவனர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள்


சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீ. R. நாச்சிமுத்து M.A.,C.A.I.I.B., அவர்கள் வங்கிப் பணித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாவட்ட கோ-ஆப்பரேட்டிவ் வங்கியில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவமே சக்தி முருகன் குரூப் நிறுவனங்களை சிறந்த முறையில் உருவாக்கவும், வழிநடத்தவும் காரணமாக அமைந்தது. மேலும் தமிழ்நாடு உள்ளடக்கிய மூன்று தென் மாநிலங்களுக்கான தமிழ்நாடு ரோலர் ஃபிளவர் மில்ஸ் அசோசியேசனின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் ஃபிளவர் மில்களின் வளர்ச்சிக்காக பல சீர்திருத்தங்களை மேற்க்கொண்டுள்ளார். சீறிய ஆற்றல் மிக்க தலைவராக விளங்கிய அவர் தனது திட்டமிடுதல், வேகமாக முடிவெடுக்கும் திறன் மற்றும் உறுதியான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர். படித்துப் பாருங்கள் எங்கள் அய்யாவின் சிந்தனைத்துளிகள்


சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் மற்றுமொரு நிறுவனரும் இந்நாள் நிர்வாக இயக்குநருமான திரு. S. R. சென்னியப்பன், அவர்கள் இத்துறையில் 35+ ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். உற்பத்தி, உற்பத்தி மேம்பாடு மற்றும் இயந்திர தொழில் நுட்பத்தில் ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றவர். மேலும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவராதலால் ஆரம்ப காலம் தொட்டு அதில் நேரடி கவனம் செலுத்தி வருவதோடு, அனைவரது பணிகளையும் ஒருங்கிணைத்து நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் வழி நடத்துகிறார்.


இணை நிர்வாக இயக்குநர்

சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குநரான திரு. P. குணசேகரன் B.E, M.B.A, அவர்கள் கெமிக்கல் இஞ்சினியரிங் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். மூலப்பொருட்கள் கொள்முதல், திட்டமிடுதல், உற்பத்தி, தரமேம்பாடு மற்றும் விற்பனைத் துறைகளில் ஆழ்ந்த கவனத்தோடும், அற்பணிப்போடும் கடந்த 20+ ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு இந் நிறுவனத்தை முன்னேற்ற பாதையில் முன்னெடுத்து செல்கிறார்.


திருமதி. N. சண்முக வடிவு B.E, M.B.A - இயக்குநர்

திருமதி. N. சண்முக வடிவு B.E. M.B.A., அவர்கள் சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் முழு நேர இயக்குநராகவும், நிதி நிர்வாகம் மற்றும் கணக்கியல் துறைக்கான பொது மேலாளராகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இந்நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை மேம்பட்ட நிலையில் வழிநடத்துவது, கணக்கியல் மற்றும் தணிக்கை துறைகளை மிகுந்த பொருப்புணர்வுடனும், தொய்வின்றின்யும் முன்னெடுத்து செல்கின்றார்.

திருமதி. S. S. கவிதா B.E, M.B.A - இயக்குநர்

திருமதி. S. S. கவிதா B.E., M.B.A., அவர்கள் சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் முழு நேர இயக்குநராகவும், சக்தி முருகன் டிரேடிங் கம்பெனி-ஐ தலைமையேற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி செல்கிறார். சிறு நுகர்வோர்களுக்கான பிரிவின் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை என அனைத்து துறைகளையும் முழு கவனத்துடன் நிர்வகித்து வருகிறார்.

திருமதி. S. பூங்கொடி M.B.A - இயக்குநர்

திருமதி. S. பூங்கொடி M.B.A., அவர்கள் சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் முழு நேர இயக்குநராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். சந்தைபடுத்துதல், போக்குவரத்து மற்றும் பொருள் நகர்வு துறைகளை தீவிர கவனத்துடன் வழிநடத்தி செல்கிறார்.

திரு. N. முத்து முரளிதரன் M.B.A - இயக்குநர்

திரு. N. முத்து முரளிதரன் M.B.A., அவர்கள் சக்தி முருகன் குரூப் நிறுவனங்களின் முழு நேர இயக்குநராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். சந்தைபடுத்துதல், விற்பனை மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்பு போன்ற துறைகளை தீவிர கவனத்துடன் வழிநடத்தி செல்கிறார்.